மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் திறந்து வைக்கப்பட்ட முதல் 12 மணித்தியாலங்களில் 2 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (15/01) ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் மத்திய அதிவேக நெடுஞ்சாலை திறந்து வைக்கப்பட்டதன் பின்னர், ஞாயிற்றுக்கிழமை (16/01) நண்பகல் 12 மணி முதல் நள்ளிரவு வரையிலான முதல் 12 மணித்தியாலங்களில், 2,805,100 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கட்டணம் வசூலிக்கப்பட்ட முதல் 12 மணித்தியாலங்களில் மீரிகம தொடக்கம் குருநாகல் வரையிலான பாதையில் மொத்தம் 13,583 வாகனங்கள் பயணித்துள்ளன என்றும் குறித்த 12 மணித்தியாலங்களில் வாகன விபத்துகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனினும் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த மத்திய அதிவேக நெடுஞ்சாலையில், வாகன நெரிசல் ஏற்படுவதாக நெடுஞ்சாலை வாகன சாரதிகளால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

நேற்றைய தினமும் (17/01) வெளியேறல் பகுதியில் பாரியளவில் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததாக பலரும் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், அதற்கு பதிலாக சாதாரண வீதிகளிலேயே பயணிக்கலாம் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version