SL vs Aus 20 -20-விறு விறுப்பான போட்டி நிறைவு

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20-20 போட்டியில் இலங்கை அணி அபார மீள் வருகை ஒன்றனை வெளிக்காட்டியது. சிறந்த போட்டி தன்மையினை வெளிக்காட்டி ரசிகர்களுக்கு சிறந்த போட்டி ஒன்றினை இலங்கை வழங்கியது.

இருந்தாலும் துடுப்பாட்டத்தில் பெற்ற ஓட்ட எண்ணிக்கை போதாமையினால் தோல்வியினை சந்திக்க நேரிட்டது. அவுஸ்திரேலியா அணி 3 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரை 2-0 என அவுஸ்திரேலிய கைப்பற்றியுள்ளது.

இன்றைய போட்டியில் குறைந்த ஓட்ட எண்ணிக்கையினை இலங்கை அணி பெற்ற போதும், பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டு அவுஸ்திரேலியா அணியின் விக்கெட்களை தகர்த்து போட்டியினை விறு விறுப்பாக மாற்றினரார்கள். வனிது ஹசரங்க மிக அபாரமாக பந்துவீசி போட்டியின் போக்கினை மாற்றினார்.

அவுஸ்திரேலிய அணி அதிரடியான ஆரம்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் முன் வரிசை விக்கெட்கள் வீழ்த்தப்பட அவுஸ்திரேலியா அணி தடுமாறி அதிரடி துடுப்பாட்டத்தை நிறுத்தி நிதானத்தை கடைபிடிக்க ஆரம்பித்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் இன்றும் மோசமாகவே அமைந்தது. கடந்த போட்டியில் சிறந்த ஆரம்பத்தை ஏற்படுத்தி கொடுத்த இரண்டு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். மத்திய வரிசையின் நிதானமான துடுப்பாட்டத்தின் மூலம் ஓட்டங்கள் கிடைத்த போதும் நேற்றைய போட்டியிலும் பார்க்க குறைவாகவே இலங்கை அணி ஓட்டங்களை பெற்றது.

ஸ்கோர்

துடுப்பாளர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்64
ஆரோன் பின்ச்பிடி,தனுஷ்கவனிது ஹசரங்க241240
டேவிட் வோர்னர்Run Out 211031
மிட்செல் மார்ஷ்L.B.Wவனிது ஹசரங்க110720
ஸ்டீவன் ஸ்மித்L.B.Wநுவான் துஷார050410
கிளென் மக்ஸ்வெல்பிடி,தனுஷ்கவனிது ஹசரங்க191900
மார்கஸ் ஸ்டோய்னிஸ்பிடி,  அசலங்கதுஷ்மந்த சமீர090701
மத்யூ வேட்  262620
அஸ்டன் ஏகர்Bowledவனிது ஹசரங்க    
ஜய் ரிச்சட்சன்  092000
       
       
உதிரிகள்  03   
ஓவர் – 17.5விக்கெட் – 07மொத்தம் 126   
பந்துவீச்சாளர்ஓவர்ஓ.ஓட்டம்விக்கெட்
மகேஷ் தீக்க்ஷன04002900
துஷ்மந்த சமீர04003101
வனித ஹசரங்க04003304
நுவான் துஷார02001801
சரித் அசலங்க03000700
தனுஷ்க குணதிலக்க0.500 08 00
துடுப்பாளர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்64
பதும் நிஸ்ஸங்கபிடி, மார்ஷ்ஜய் ரிச்சட்சன்030600
தனுஷ்க குணதிலக்கபிடி, மார்ஷ்கிளென் மக்ஸ்வெல்040401
சரித் அசலங்கபிடி, பின்ச்கிளென் மக்ஸ்வெல்393322
குசல் மென்டிஸ்Hit Wicketஜய் ரிச்சட்சன்363621
பானுக ராஜபக்ஷபிடி, ஹெசல்வூட்கேன் ரிச்சர்ட்சன்131110
தஸூன் ஷானகபிடி, பின்ச்கேன் ரிச்சர்ட்சன்141720
வனிந்து ஹசரங்கபிடி, வோர்னர்ஜய் ரிச்சட்சன்120820
சமிக்க கருணாரட்ன கேன் ரிச்சர்ட்சன்000200
துஷ்மந்த சமீரபிடி,எஷ்டன் எகர்கேன் ரிச்சர்ட்சன்000100
மகேஷ் தீக்க்ஷன      
நுவன் துஷார   01 01 0
உதிரிகள்  03   
ஓவர் – 20விக்கெட் – 09மொத்தம் 124   
பந்துவீச்சாளர்ஓவர்ஓ.ஓட்டம்விக்கெட்
கிளென் மக்ஸ்வெல்03001802
ஜோஷ் ஹெசல்வூட்04011600
ஜய் ரிச்சட்சன்04002603
கேன் ரிச்சர்ட்சன்04003004
எஷ்டன் எகர்04002700
மிட்செல் மார்ஷ்01000700

——-

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20-20 போட்டியில் இலங்கை அணி துடுப்பாட்டத்தை நிறைவு செய்துள்ளது. கடந்த போட்டியில் சிறந்த ஆரம்பத்தை ஏற்படுத்தி கொடுத்த இரண்டு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

மத்திய வரிசையின் நிதானமான துடுப்பாட்டத்தின் மூலம் ஓட்டங்கள் கிடைத்த போதும் அவுஸ்திரேலியா அணியினை கட்டுப்படுத்தும் அளவுக்கு ஓட்டங்களை பெறமுடியவில்லை. நேற்றைய போட்டியிலும் பார்க்க குறைவாகவே இலங்கை அணி ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்ட வீரர்கள் தங்களது விக்கெட்களை பாதுகாக்க விளையாடியது போலவே தென்பட்டது.

இறுக்கமான அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு இன்றும் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையினை கட்டுப்படுத்தியுள்ளது. அதிரடியாக இலங்கை துடுப்பாட்ட வீரர்களினால் துடுப்பாட முடியவில்லை. இதன் காரணமாக பெரிய ஓட்ட எண்ணிக்கை ஒன்றினை பெறமுடியவில்லை.

இந்த ஓட்ட எண்ணிக்கை அவுஸ்திரேலயா அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்த முடியுமா என்பது சந்தேகமே.

—————-

நாணய சுழற்சி

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20-20 போட்டி ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.

நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. இலங்கை அணி மாற்றங்களின்றி அதே அணியுடன் விளையாடும் அதேவேளை, அவுஸ்திரேலியா அணி சார்பாக மிட்செல் ஸ்டார்க் நீக்கப்பட்டு ஜய் ரிச்சட்சன் சேர்க்கப்பட்டுள்ளார். மிட்செல் ஸ்டராக்கிற்கு நேற்றைய போட்டியில் கையில் காயம் ஏற்பட்டிருந்தது.

நேற்று நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா அணி 10 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

இலங்கை அணி – 1 தனுஷ்க குணதிலக்க, 2 பதும் நிஸ்ஸங்க, 3 சரித் அசலங்க, 4 குசல் மென்டிஸ் (வி.கா), 5 பானுக ராஜபக்ஷ, 6 தஸூன் ஷானக (தலைவர்), 7 வனிந்து ஹசரங்க, 8 சமிக்க கருணாரட்ன, 9 நுவன் துஷார, 10 துஷ்மந்த சமீர, 11 மகேஷ் தீக்க்ஷன

அவுஸ்திரேலியா உத்தேச அணி – 1 ஆரோன் பின்ச் (தலைவர்), 2 டேவிட் வோர்னர், 3 மிட்செல் மார்ஷ், 4 கிளென் மக்ஸ்வெல், 5 ஸ்டீவன் ஸ்மித், 6 மார்கஸ் ஸ்டோய்னிஸ், 7 மத்யூ வேட் (வி .கா), 8 எஷ்டன் எகர், 9 ஜய் ரிச்சட்சன், 10 கேன் ரிச்சர்ட்சன், 11 ஜோஷ் ஹசல்வுட்

SL vs Aus 20 -20-விறு விறுப்பான போட்டி நிறைவு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version