டினேஷ் சாப்டரின் இறப்பு தற்கொலையா?

அண்மையில் மரணமான டினேஷ் சாப்டரர் கொலை செய்யப்படவில்லை எனவும், தற்கொலை செய்து கொண்டிருக்கலாமென்ற சந்தேகம் உருவாகியுள்ளது.

குற்றப்புலனாய்வு விசாரணைகளின் அடிப்படையில் இந்த சந்தேகம் எழுந்துள்ளது. அவரது கழுத்தில் கட்டப்பட்டிருந்த வயரின் மீதி துண்டுகள் அவரது வீட்டிலிருந்து பெறப்பட்டுள்ளன. கைகளை கட்டுவதற்கு பயன்படுத்திய வயரது மீதி துண்டுகளும் அவரது வீட்டில் கிடைத்துள்ளன. அத்தோடு மேலும் பல ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

அவரது மனைவியின் தாயாருக்கு அவரது இறப்பு சில தினங்களுக்கு முன்னர் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் “மகளை நல்லவராக வளர்த்தமைக்கு நன்றி” என அந்த கடிதத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அத்தோடு பல உணர்ச்சிபூர்வமான விடயங்களையும் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். அதேவேளை அவரது ப்ளவர் வீதி வீட்டினை விற்குமாறும் அறிவுரை வழங்கியுள்ளார்.

டினேஷ் சாப்டர் பல வியாபரங்களில் ஈடுபட்டு, மிக மோசமான நஷ்டங்கள் ஏற்பட்ட நிலையில், பணத்தினை மீள பெற முடியாத நிலையில் மனவுளைச்சலோடு காணப்பட்டார் எனவும் விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டினேஷ் சாப்டரின் தற்கொலை என்ற முடிவுக்கு வரவில்லை எனவும் சகல கோணங்ககளிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பொலிஸ் இதுவரை டினேஷின் குடும்ப அங்கத்தவர்கள் அடங்கலாக 70 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்ம், டினேஷின் மனைவி, இரண்டு சகோதரர்கள் மற்றும் சகோதரியிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

டினேஷ் சாப்டரின் இறப்பு தற்கொலையா?

Social Share

Leave a Reply