இலங்கையை சேர்ந்த, இந்தியா பிரபல திரைப்பட நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பண மோசடி வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த வழக்கில் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.
சுகேஷ் சந்திரசேகர் எனும் தொழிலதிபரிடம் பணம் பறித்த வழக்கில் முன்னரே அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பலமுறை தனது வாதத்தை முன்வைக்குமாறு ஜாக்குலின் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருந்தபோதும் அவர் அதற்கு முன்வரவில்லை என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
215 கோடி ருபாய் பண மோசடி வழக்கொன்றில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த சுகேஷ் சந்திரசேகர் பல உண்மைகளை வெளியிட்டுள்ளார். அவர் மோசடி செய்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாகவும், அதிக பெறுமதி மிக்க பரிசுகளை ஜாக்குலினிற்கு அவர் வழங்கியதாகவும் கூறியுள்ளார்.
சுகேஷ் சந்திரசேகர் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனிப்பட்டரீதியில் பழகி வந்தனர் என நடிகை தரப்பு சட்டத்தரணி ஒருவர் ஏற்கனவே தகவல் வெளியிட்டிருந்த போதும் ஜாக்குலின் அது தொடர்பில் எந்த கருத்தும் வெளியிடவில்லை.
இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகரிடம் பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தொடர்புபட்டிருப்பது தெரியவந்துள்ள நிலையில் தற்போது அவர் குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.