இலங்கையின் சுகாதாரத்துறையை மீட்டெடுக்க 500 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும், அதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நாட்டை வங்குரோத்து பட்டியலில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணை மீது உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த நாடு வங்குரோத்து நிலைமைய அடைந்தமைக்கு ஒருசிலர் மாத்திரம் காரணம் அல்ல எனவும் அதற்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
உண்ணாட்டரசிறை சட்டமூலத்தை விரைவாக நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பது, நாட்டை வங்குரோத்து பட்டியிலில் இருந்து மீட்டுகொள்வதற்காகவே எனக் கூறிய அவர், சுகாதாரத்தை அரசியலாக்குவதால் பயன் ஏதும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.