மஞ்சள் காமாலை தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சப்ளையர்கள் இல்லாத காரணத்தினால் குறித்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து விரைவில் யுனிசெப் நிறுவனத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு போதுமான காண்டாக்ட் லென்ஸ்கள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக காண்டாக்ட் லென்ஸ்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள சுகாதார அமைச்சர், மருத்துவ வழங்கல் திணைக்களத்தின் தரவு அமைப்பில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக கையிருப்பு தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.