சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தை குறைந்தது 50 நாட்களுக்கு மூட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று (15/11) ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி பிரச்சினையை தொடர்ந்துமசகு எண்ணெய் நாட்டிற்கு கிடைக்கும் வரை சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தை நீண்ட காலம் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும் என்பதுடன், மசகு எண்ணெய்க்கான தட்டுப்பாட்டின் காரணமாக நிலையத்தின் எரிபொருள் உற்பத்தி செயற்பாடுகள் இன்று (15/11) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.