மருத்துவ பயன்பாட்டுக்காக கஞ்சாவுக்கு அனுமதி!

மருத்துவ பயன்பாட்டுக்காக கஞ்சா பயன்படுத்த அனுமதிக்கும் சட்டமூலத்தை தாய்லாந்து அரசாங்கம் கொண்டு வரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மருத்துவ நோக்கத்திற்காக கஞ்சாவை எப்படி பயன்படுத்துவது என்பதை சட்டமூலம் தெளிவுப்படுத்தும் எனவும் அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சட்டமூலத்திற்கு அமைய கஞ்சாவை பயன்படுத்துவதற்கு மருத்துவரின் ஆலோசனை குறிப்பு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிரிடல், அதற்கான இடம், விற்பனை, விநியோகம், தொடர்பான விபரங்களும், சட்டமூலத்தில் உள்ளடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version