மின்சார சபை ஊழியர்களின் விசேட கலந்துரையாடல் இன்று..!

மின்சார சபை ஊழியர்கள் குழுவொன்றின் சேவை இடைநிறுத்தத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் மருதானையில இன்று காலை 9 மணிக்கு; நடைபெறவுள்ளது.

இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்களின் தலைமையில் நடைபெறும் இந்த கலந்துரையாடலில் நாட்டின் அனைத்து பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்குபற்ற உள்ளன.

இதேவேளை, இன்று காலை 7 மணிக்கு இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக கையேடு விநியோகம் செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்கவும் தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இலங்கை மின்சார சபையின் தலைமையகத்திற்கு முன்பாக எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்ள சிவில் அமைப்புக்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version