ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இன்று(18) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று(18) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று(18) நடைபெறவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பிலும் அதற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஆட்சேபனை தொடர்பிலும் ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில், கட்சியின் பதில் பொதுச் செயலாளரால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.