நாட்டினுள் விசேட பாதுகாப்பு திட்டம் அமுலில் 

மே தினத்தை முன்னிட்டு இன்று(30.04) முதல் நாட்டில் விசேட பாதுகாப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

கொழும்பு நகரம் உள்ளிட்ட மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்கள் முன்னெடுக்கப்படும் நகரங்களை மையப்படுத்தி இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதற்கு பிரதான அரசியல் கட்சிகள், மே தினப் பேரணிகளையும் கூட்டங்களையும் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக கொழும்பில் இடம்பெறவுள்ள மே தினப் பேரணிகள், கூட்டங்களின் பாதுகாப்பிற்காக 6000 பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

மேலும் 4000 பொலிஸார் ஏனைய பிரதேசங்களில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் இராணுவத்தினரின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மே தினப் பேரணிகள், கூட்டங்களில் ட்ரோன் கெமராக்களை அனுமதியின்றிப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ட்ரோன் கெமராக்களைப் பயன்படுத்த வேண்டிய தேவையேற்படின் முன்னனுமதி பெற வேண்டுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இம்முறை மே தினத்தை முன்னிட்டு, கொழும்பு நகரில் மாத்திரம் 14 மே தினப் பேரணிகளும் கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் 40 மே தினப் பேரணிகளும் கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply