ரஷ்யா – உக்ரைன் போரில் இலங்கையர்கள் – அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

ரஷ்யா – உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் போதுமான முயற்சி எடுக்கவில்லையென ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான விசேட ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்

“வேலைக்காக குடிபெயர்ந்த இலங்கையர்கள் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிலர் சட்டவிரோதமாக குடிபெயர்ந்துள்ளதால் அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்த முடியாது என அமைச்சர் ஒருவர் கூறினார். இது முற்றிலும் தவறானது.

அவர்கள் இலங்கையின் குடிமக்கள். அவர்களைக் காப்பாற்றுவது எமது பொறுப்பு. இவர்கள் இலங்கை அரசாங்கத்தின் அங்கீகாரமின்றி இடம்பெயர்ந்துள்ள போதிலும், அரசாங்கத்தின் ஈடுபாட்டுடன் அவர்கள் போரில் ஈடுபடுவதற்கு பட்டியலிடப்பட்டுள்ளனர்.

இந்த நபர்கள் ரஷ்ய அரசாங்கத்துடன் போரில் ஈடுபடுவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர், அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் முயற்சிகளுக்கு இது உதவியாக இருக்கும்.

நான் ஒரு இராஜதந்திரியோ அல்லது தூதுவனோ அல்ல ஆனால் இந்த நபர்களைத் திருப்பி அனுப்ப முடியும் என்பதை என்னால் கூற முடியும்.

ரஷ்யா – உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வரும் முயற்சிகளுக்கு நான் உதவுவதற்கு தயாராக உள்ளேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version