LPL – கண்டி அணிக்கான வெற்றியிலக்கு

2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதற் போட்டி கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் கண்டி பல்கோன்ஸ் மற்றும் தம்புள்ள சிக்சேர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது கண்டி பல்கோன்ஸ் அணி.

முதலில் துடுப்பாடிய தம்புள்ள சிக்சேர்ஸ் அணி தசசூன் சாணக்கவின் அபாரமான பந்துவீச்சில் தடுமாறியது. நான்கு ஓவர்களுள் 3 விக்கெட்களை அவர் கைப்பற்றினார். மொஹமட் ஹஸ்னைன் ஒரு விக்கெட்டை கைப்பற்ற நான்கு ஓவர்களில் 4 விக்கெட்ளை இழந்து தம்புள்ளை அணி தடுமாறியது. தனுஷ்க குணதிலக 11 ஓட்டங்களுடன் முதலில் ஆட்டமிழந்தார். நுவனிது பெர்னாண்டோ 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இருவரும் தசசூன் சாணக்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். குஷல் பெரேரா ஓட்டமெதுவுமின்றி மொஹமட் ஹஸ்னைனின் பந்துவீச்சில் அடுத்து ஆட்டமிழந்தார். தஸூன் சாணக்கவின் பந்துவீச்சில் தொளஹித் ரிதோய் 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இந்த ஆட்டமிழப்புகளுக்கு பின்னர் ஜோடி சேர்ந்த மார்க் சப்மன், சமிந்து விக்ரம்சிங்க ஜோடி மிக சிறப்பாக இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கி தடுமாறிய அணியை மீட்டு எடுத்தனர். சமிந்து விக்ரம்சிங்க கண்டி, புனித அந்தோனியார் பாடசாலை முன்னாள் வீரர் ஆவர். 20 வயதான இவரின் முதலாவது 20-20 அரைச்சதம் இதுவாகும். மார்க் சப்மன் ஆட்டமிழக்காமல் 91 ஓட்டங்களையும், சமிந்து விக்ரம்சிங்க ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்கள் ஐந்தவாது விக்கெட் இணைப்பாட்டமாக 154 ஓட்டங்களை பகிர்ந்தனர். இந்த இணைப்பாட்டம் மூலம் 20 ஓவர்களில் 4 விக்கெட்ளை இழந்து தம்புள்ளை அணி 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 4 ஓவர்கள் வீசி 32 ஓட்டங்களை வழங்கினார். விக்கெட்களை கைப்பற்ற முடியவில்லை. டுஸ்மாந்த சமீர 4 ஓவாக்ரள் பந்துவீசி 27 ஓட்டங்களை வழங்கினார். மொஹமட் ஹஸ்னைன் 4 ஓவாக்ரள் பந்துவீசி 53 ஓட்டங்களை வழங்கி 1 விக்கெட்டை கைப்பற்றினார். தஸூன் சாணக்க 4 ஓவர்கள் பந்துவீசி 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

அணி விபரம்

கண்டி பல்கோன்ஸ் – வனிந்து ஹசரங்க, அஞ்சலோ மத்தியூஸ், டுஸ்மந்த சமீர, கமிந்து மென்டிஸ், அன்றே ப்லட்சர், டினேஷ் சந்திமால், தஸூன் சாணக்க, மொகமட் ஹஸ்னைன், சமத் கோமஸ், சத்துரங்க டி சில்வா, மொஹமட் ஹரிஸ்

தம்புள்ள சிக்சேர்ஸ் – டில்ஷான் மதுஷங்க, நுவான் துஷார, முஸ்டபைஸூர் ரஹ்மான்,அகில தனஞ்செய, தனுஷ்க குணதிலக, நுவனிது பெர்னாண்டோ, குஷல் ஜனித் பெரேரா, தௌஹித் ரிதோய், மொஹமட் நபி, மார்க் சப்மன், சமிந்து விக்ரம்சிங்கே

லங்கா பிரீமியர் லீக் தொடர் ஆரம்பம். LPL. Lanka Premier League.
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version