பிரித்தானியாவில் வாக்குப்பதிவுகள் தீவிரம்

பிரித்தானியாவில் நாடாளுமன்றத் தேர்தல் இன்று (04.07) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

வாக்குச் சாவடிகள் இன்று காலை 07 மணிக்கு திறக்கப்பட்ட நிலையில் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதுடன் பிரித்தானிய,
ஐரிஷ் அல்லது பொதுநலவாய நாடுகளின் குடிமகனாக இருக்க வேண்டும்.
இதன்படி, சுமார் 50 மில்லியன் மக்கள் வாக்களிக்கப் பதிவு செய்துள்ளனர்.

வாக்குப்பதிவுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெறுவதுடன் பெரும்பாலான முடிவுகள்
ஒரே இரவில் அறிவிக்கப்படும் என்பதுடன் இறுதி முடிவுகள் நாளைவெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,650 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரு கட்சி 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

அவ்வாறு பெரும்பான்மையை பெரும் கட்சி கட்சியின் தலைவர் பிரதமராக பொறுப்பேற்பார்.

வாக்கெடுப்பில் தொழிற்கட்சி மாபெரும் வெற்றியைப் பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தொழிற்கட்சியின் இந்த வெற்றி 14 ஆண்டுகால கன்சர்வேடிவ் அரசாங்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version