ருஹுணு கதிர்காம பெரஹெராவில் யானை குழம்பியதில் 13 பேர் காயமடைந்துள்ளதாக
கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம், நேற்றிரவு (06.07) இடம்பெற்றுள்ளது
யானை குழப்பமடைந்து கட்டுப்பாட்டை மீறி ஓடியதில் பார்வையாளர்கள் பீதியடைந்ததில் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த பார்வையாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.