LPL – கண்டி, காலி மோதல் ஆரம்பம்

Kandy Falcons  Vs Dambulla Siksers. காலி-தம்புள்ளை மோதல். இரு அணிகளுக்குமான முக்கியமான போட்டி.

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரின் ஆறாம் நாளான இன்று கண்டி பல்கோன்ஸ், கோல் மார்வல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி தம்புள்ளை ரங்கிரி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கோல் மார்வல்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

கண்டி அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றியினை பெற்றுள்ள நிலையில் 2 புள்ளிகளோடு நான்காமிடத்தில் காணப்படுகிறது. கோல் மார்வல்ஸ் அணி மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளைப் பெற்று 4 புள்ளிகளோடு மூன்றாமிடத்தில் காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியம் வாய்ந்ததாக அமைகிறது.

அணி விபரம்

கண்டி அணி சார்பாக சத்துரங்க டி சில்வா நீக்கப்பட்டு லக்ஷான் சந்தகான் சேர்க்கப்பட்டுள்ளார்.

காலி அணியில் மல்ஷா தருப்பதி நீக்கப்பட்டு கவிந்து நதீஷான் இணைக்கப்பட்டுளார்

கண்டி பல்கோன்ஸ் – வனிந்து ஹசரங்க, அஞ்சலோ மத்தியூஸ், டுஸ்மந்த சமீர, கமிந்து மென்டிஸ், அன்றே ப்லட்சர், டினேஷ் சந்திமால், தஸூன் சாணக்க, பவான் ரத்நாயக்க, சொரிபுல் இஸ்லாம், மொஹமட் ஹரிஸ்

கோல் மார்வல்ஸ் – பானுக்க ராஜபக்ஷ, நிரோஷன் டிக்வெல்ல, மஹீஸ் தீக்ஷண, ரிம் ஷெய்பேர்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜனித் லியனகே, டுவைன் ப்ரட்டோரியஸ், ஷஹான் ஆராச்சிகே, ஷகூர் கான், , இசுரு உதான,கவிந்து நதீஷான்

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version