LPL – காலி எதிர் தம்புள்ளை போட்டி சமநிலையில் நிறைவு.

கோல் மார்வல்ஸ், மற்றும் தம்புள்ளை சிக்சேர்ஸ் அணிகளுக்கிடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய(14.07) முதற்போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சமநிலையில்இந்தப் போட்டி நிறைவடைந்துள்ளது.

149 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய தம்புள்ளை சிக்சேர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குஷல் பெரேரா தனது முதற் பந்திலேயே ஆட்டமிழந்தார். ரீஷா ஹென்றிக்ஸ், இப்ராஹிம் ஷர்டான் ஜோடி இணைப்பாட்டம் ஒன்றை கட்டியெழுப்ப ஆரம்பித்த வேளையில் இப்ராஹிம் ஷர்டான் 30(18) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். லஹிரு உதார 12(11) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மார்க் சப்மன் மற்றும் சமிந்து விஜயசிங்க ஆகியோர் தலா 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். தம்புள்ளை அணி விக்கெட்களை இழந்தது தடுமாறிய போதும் ரீஷா ஹென்றிக்ஸ் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி இலக்குக்கு அழைத்துச் சென்றார். ஆட்டமிழக்காமல் ஓட்டங்களைபெற்றுக்கொண்டார் . இறுதி நேரத்தில் மொஹமட் நபி நல்ல இணைப்பாட்டத்தை வழங்கினார். அவர் 21(16) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இறுதி ஓவரில் 8 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் மூன்றாவது பந்தில் ரீஷா ஹென்றிக்ஸ் ஆட்டமிழந்தார். இறுதிப் பந்தில் ரன் அவுட் மூலமாக நபி ஆட்டமிழந்தார்.

தம்புள்ளை 20 அணி ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது.

பந்துவீச்சில் டுவைன் பிரட்ரோரியஸ் 03 ஓவர்கள் பந்துவீசி 27 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். மஹீஸ் தீக்ஷண 04 ஓவர்கள் பந்துவீசி 26 ஓட்டங்களை வழங்கி 04 விக்கெட்களை கைப்பற்றினார். கவிந்து நதீஷான் 4 ஓவர்கள் பந்துவீசி 29 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். சஹான் ஆராச்சிகே 3 ஓவர்கள் பந்துவீசி 13 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார்.

முதலில் துடுப்பாடிய காலி அணி அலெக்ஸ் ஹேல்ஸின் அதிரடியான துடுப்பாட்டம் மூலம் நல்ல ஆரம்பத்தை பெற்றது. நிரோஷன் டிக்வெல்ல 07(10) ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து 38(26) ஓட்டங்களோடு ஹேல்ஸ் ஆட்டமிழந்தார். சிறிய இடைவெளியில் பானுக்க ராஜபக்ஷ 01(05) ஓட்டத்துடன் ஆட்டமிழக்க காலி அணியின் தடுமாற்றம் ஆரம்பமானது. ரிம் செய்பேர்ட் 13(14) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஜனித் லியனகே 13(14) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். டுவைன் பிரட்ரோரியஸ் 16(12) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஷகான் ஆராச்சிஹே 15(12) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இசுரு உதான 02(04) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

கோல் மார்வல்ஸ் அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது.

மொஹமட் நபி 4 ஓவர்களில் 14ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களையும், டுஸான் ஹேமந்த 4 ஓவர்களில் 19 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களையும், டில்ஷான் மதுசங்க 4 ஓவர்களில் 19 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். சமிந்து விக்ரமசிங்க 01 ஓவர் பந்துவீசி 09 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். நுவான் துஷார 4 ஓவர்கள் பந்துவீசி 33 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். நுவான் பிரதீப் 4 ஓவர்களில் ஓட்டங்களை வழங்கி விக்கெட்களை கைப்பற்றினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version