மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றம்

மேல் மாகாணத்தில் நாளை(15) முதல் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணம் 100 ரூபாயிலிருந்து 90 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மவிக்கிரம தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் நாளை(15) முதல் முச்சக்கர வண்டி கட்டணமாக முதல் கிலோமீட்டருக்கு 100 ரூபாவும், 2வது கிலோ மீட்டரிலிருந்து 90 ரூபாவும் பயணிகளிடமிருந்து அறவிடப்படவுள்ளது. 

மேலும், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை முச்சக்கர வண்டி கட்டணங்களில் 15% கூடுதலாக அறவிப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முச்சக்கர வண்டி கட்டணங்கள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின், பொலிஸ், நுகர்வோர் அதிகார சபை உள்ளிட்ட உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யுமாறு அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மவிக்கிரம பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

Social Share

Leave a Reply