“வெற்றி உறுதியில்லை என்றால், வேட்பாளராகியிருக்க மாட்டேன்” – விஜயதாச 

"வெற்றி உறுதியில்லை என்றால், வேட்பாளராகியிருக்க மாட்டேன்" - விஜயதாச 

வெற்றி உறுதியில்லை என்றால், தேர்தலில் களமிறங்கியிருக்க மாட்டேன் என ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

தேர்தலில் தனக்கு நிலவும் சவால்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை என்றும், அதற்காக காலத்தை வீண் விரயம் செய்யாமல் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து முன் கொண்டு செல்வதாகவும் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

வாக்குகளை உடைப்பதற்காக தான் தேர்தலில் களமிறங்கியதாக கூறுவது முட்டாள்தனம் எனவும், மக்களுக்கு உண்மையான வேட்பாளர்கள் யார் என்பது நன்றாகவே தெரியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில், அரச மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கத்துடன் இன்று(21.08) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்‌ஷ இதனை தெரிவித்துள்ளார். 

இதேவேளை, தேர்தலின் பின்னர் வைத்தியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

உரிய தரத்துடன் கூடிய சுகாதார சேவையை பேணுவதற்கும், வைத்தியர்கள் வெளிநாட்டிற்கு செல்லாமல் இலங்கையிலேயே தொடர்ந்து பணியாற்றுவதற்குமான யோசணைகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

Social Share

Leave a Reply