கடவுச்சீட்டு வரிசைகளின் பின்னணியில் மோசடி கும்பல் 

கடவுச்சீட்டு வரிசைகளின் பின்னணியில் மோசடி கும்பல் 

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டுக்களைப்பெற்றுக்கொள்வதற்காகக் காணப்படும் வரிசைகளின் பின்னணியில் மோசடி கும்பல் காணப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். 

கடவுச்சீட்டு பற்றாக்குறையினால் வரிசைகள் உருவாகவில்லை எனவும், சில நபர்கள் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ளும் டோக்கன் முறையை முறைகேடாக பயன்படுத்தியமையினால் வரிசைகள் உருவாகுவதற்குக் காரணமாக அமைந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மோசடி குழுவொன்று 100க்கு மேற்பட்ட கைத்தொலைபேசி சிம் அட்டைகளைப் பயன்படுத்தி, கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்கான முன்பதிவுகளை மேற்கொண்டு, பின்னர் குறித்த முன்பதிவுகளை சுமார் 45,000 ரூபாவிற்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டிரான்அலஸ் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதன் காரணமாகக் குறித்த இணையவழி முன்பதிவு முறையை மாற்றம் செய்து டோக்கன் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட போதும், அதனையும் முறைகேடாகப் பயன்படுத்தி டோக்கன்களை சுமார் 20,000 முதல் 25,000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், தற்பொழுது கடவுச்சீட்டு வரிசைகளை நிர்வகிக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகக் கடவுச்சீட்டுக்கான வரிசைகள் குறைவடைந்துள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான்அலஸ் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version