
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த நாமும் ஒத்துழைப்பு வழங்குவோம் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இன்று நாட்டில் சட்டம் ஒழுங்குத் துறையில் பாரிய பிரச்சினை ஏற்பட்டு, கொலைகள் இடம்பெற்று வருகின்றன.
சிறு பிள்ளைகள் கூட மரணிக்கின்றனர். இதனால் பலமான தீர்வினை அரசாங்கம் வழங்க வேண்டும். அதற்கு எதிர்கட்சி என்ற வகையில் நாமும் ஒத்துழைப்பு வழங்கத் தயார்.
நீதிமன்றத்தினுள் கூட பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவர் மரண பயத்துடன் நீதிமன்றத்திற்கு செல்வார் என்றால் அது பாரிய பிரச்சினை.
அதனால் இது குறித்து அவதானத்தை செலுத்தி வலுவான தீர்மானங்களை எடுக்குமாறு கோிக்கை விடுக்கிறேன்.
சமூகத்தில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறக்கூடாது.
சட்டம் ஒழுங்கை பலப்படுத்தும் அதிகாரமும் அரசுக்கு உள்ளதால், இவற்றை தடுத்து நிறுத்தி உடனடியாக இது தொடர்பாக விசேட அறிவிப்பினை வெளியிட வேண்டும்” என்றார்.