
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்ததாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை சபாநாயகர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.