கொக்கேயினுடன் இலங்கை வந்த வெளிநாட்டவர்!!!

வெளிநாட்டு பிரஜை ஒருவர் கொலம்பியாவில் இருந்து கட்டார் ஏர்வேஸ்சில் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார். இவர் தொலைநகல் இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் காகித சுருள்களுக்குள் மறைத்து 5 கிலோ கிராம் நிறையுடைய கொக்கேயின் போதைப்பொருளை கொண்டுவந்த்துள்ளார்.

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் சந்தேக நபர் கைத்துசெய்யப்பட்டுள்ளார். அவர் கொண்டுவந்த கொக்கேயினின் பெறுமதி 24.5 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply