LPL – கண்டி எதிர் தம்புள்ளை நாணய சுழற்சி

லங்கா பிரீமியர் லீக் தொடர் ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது. இது ஐந்தாவது LPL தொடராகும். இந்த வருடத்துக்கான தொடரை இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சாமரி அத்தப்பத்து ஆரம்பித்து வைத்தார். அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் இந்த வருடத்துக்கான தொடரின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நடப்பு சம்பியனான கண்டி அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க அவரிடம் கிண்ணத்தை கையளித்தார்.

இன்றைய முதற் போட்டி பி லவ் கண்டி பல்கோன்ஸ் மற்றும் தம்புள்ள சிக்சேர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி பல்கோன்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

அணி விபரம்

கண்டி பல்கோன்ஸ் – கண்டி பல்கோன்ஸ் – வனிந்து ஹசரங்க, அஞ்சலோ மத்தியூஸ், டுஸ்மந்த சமீர, கமிந்து மென்டிஸ், அன்றே ப்லட்சர், டினேஷ் சந்திமால், தஸூன் சாணக்க, மொகமட் ஹஸ்னைன், சமத் கோமஸ், சத்துரங்க டி சில்வா, மொஹமட் ஹரிஸ்

தம்புள்ள சிக்சேர்ஸ் – தம்புள்ள சிக்சேர்ஸ் – டில்ஷான் மதுஷங்க, நுவான் துஷார, முஸ்டபைஸூர் ரஹ்மான்,அகில தனஞ்செய, தனுஷ்க குணதிலக, நுவனிது பெர்னாண்டோ, குஷல் ஜனித் பெரேரா, தௌஹித் ரிதோய், மொஹமட் நபி, மார்க் சப்மன், சமிந்து விக்ரம்சிங்கே

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version