LPL – யாழ் அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது காலி

லங்கா பிரீமியர் லீக் போட்டி தொடர் ஒரு நாள் இடைவெளியின் பின்னர் இன்று(05.07) தம்புள்ளை, ரங்கிரி சர்வதேச மைதானத்தில் கோல் மார்வல்ஸ், ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய கோல் மார்வல்ஸ் அணி ஆரம்ப விக்கெட்களை வேகமாக இழந்து தடுமாறியது. கடனர்த்த போட்டிகளில் சிறப்பாக அதிரடியாக துடுப்பாடிய இரு வீரர்களையும் வேகமாக ஆட்டமிழகச் செய்தமையினால் யாழ் அணி காலி அணி மீது அழுத்தத்தை ஏற்படுத்தியது. யாழ் அணியில் இந்தப் போட்டியில் சேர்க்கப்பட்ட ப்ரமோட் மதுஷான், நிரோஷன் டிக்வெல்லவின் விக்கெட்டை கைப்பற்றினார். டிக்வெல்ல 12(09) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அலெக்ஸ் ஹேல்ஸ் 23(19) ஓட்டங்களுடன் அஷ்மதுல்லா ஓமர்ஷாயின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஷாகன் ஆர்ச்சிகே 02(03) ஓட்டங்களுடன் அஷ்மதுல்லா ஓமர்ஷாயின் பந்துவீச்சில் வெளியேறினார்.

நான்காவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ரிம் செய்பேர்ட், பானுக்க ராஜபக்ஷ ஆகியோர் அணியை மீட்டு எடுத்தனர். இருவரும் 69 ஓட்டங்களை பகிர்ந்த வேளையில் பானுக ராஜபக்ஷ 28(21) ஓட்டங்களை பெற்றபோது பேபியன் அலனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரிம் செய்பேர்ட்டின் அதிரடி காலி அணிக்கு கைகொடுத்தது. அவர் 104 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொடுத்தார். 98 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் துடுப்பில் பந்து பதிந்து விக்கெட் காப்பாளரிடம் சென்றிருந்தது. ஆனாலும் ஆட்டமிழப்பு கோரப்படவில்லை. ஜனித் லியனகே 06(05) ஓட்டங்களை பெற்றார்.

காலி அணி 20 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்றது.

யாழ் அணியின் பந்துவீச்சில் அஷ்மதுல்லா ஒமர்ஷாய் 4 ஓவர்களில் 33 ஓட்டங்களை வழங்கி 2 விக்கெட்ளை கைப்பற்றினார். ப்ரமோட் மதுஷான் 4 ஓவர்களில் 36 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். பேபியன் அலன் 4 ஒவகர்களில் 42 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை கைப்பற்றினார். வியாஸ்காந் இன்றும் இரண்டு ஓவர்கள் வீசினார். விக்கெட்களை கைப்பற்ற முடியவில்லை.

காலி அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் காணப்படுகிறது. யாழ் அணி ஒரு வெற்றியை பெற்று மூன்றாமிடத்தில் காணப்படுகிறது.

அணி விபரம்

யாழ் அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தனஞ்சய டி சில்வா, பெஹ்ரன்டோப் ஆகியோர் நீக்கப்பட்டு ப்ரமோட் மதுஷான், அலெக்ஸ் ரோஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோல் மார்வல்ஸ் – பானுக்க ராஜபக்ஷ, நிரோஷன் டிக்வெல்ல, மஹீஸ் தீக்ஷண, ரிம் ஷெய்பேர்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜனித் லியனகே, டுவைன் ப்ரட்டோரியஸ், ஷஹான் ஆராச்சிகே, ஷகூர் கான், மால்ஷா திருப்பதி, இசுரு உதான

ஜப்னா கிங்ஸ் – குஷல் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, விஜயகாந்த் வியாஸ்காந்த், ரிலி ரொசோவ், பேபியன் அலன், ஹஸ்மதுல்லா ஓமர்சாய், அசித்த பெர்னாண்டோ, பத்தும் நிஸ்ஸங்க, அலெக்ஸ் ரோஸ், ப்ரமோட் மதுஷான்

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version