லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரின் ஆறாம் நாளான இன்று கண்டி பல்கோன்ஸ், கோல் மார்வல்ஸ் அணிகளுக்கிடையில் தம்புள்ளை ரங்கிரி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கோல் மார்வல்ஸ் அணி 06 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் காலி அணி இரண்டாமிடத்தை தனதாக்கிக் கொண்டது.
176 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த காலி அணி ஆரம்ப விக்கெட்டை வேகமாக இழந்தது. அதிரடியாக ஆர்மபித்த நிரோஷன் டிக்வெல்ல 12(6) ஓட்டங்களை பெற்று சொரிபுள் இஸ்லாமின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ், ரிம் செய்பேர்ட் ஜோடி அதிரடி நிகழ்த்தி ஓட்ட எண்ணிக்கையை சடுதியாக உயர்த்தினர். 79 ஓட்டங்கள் இவர்களது இணைப்பாட்டம். வனிந்து ஹசரங்கவின் முதல் ஓவரில் 27 ஓட்டங்கள் அடிக்கப்பட்டன. LPL வரலாற்றில் பவர் பிளே ஓவர்களில் பெறப்பட்ட கூடுதலான 89 ஓட்டங்களை காலி அணி பெற்றுக்கொண்டது. வனிந்துவின் இரண்டாவது ஓவரில் அலெக்ஸ் ஹேல்ஸ் 38(19) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தடுமாறி 16(13) ஓட்டங்களை பெற்ற வேளையில் பானுக்க ராஜபக்ஷ சொரிபுள் இஸ்லாம் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். ஜனித் லியனகே 11(7) ஓட்டங்களுடன் லக்ஷன் சந்தகானின் பந்தில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் சதமடித்த ரிம் செய்பேர்ட் இந்தப் போட்டியில் அரைச்சதம் அடித்து ஆட்டமிழக்காமல் 82(49)ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
17.2 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களை காலி அணி பெற்றுக்கொண்டது.
கண்டி அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 4 ஓவர்கள் பந்துவீசி 36 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். சொரிபுள் இஸ்லாம் 4 ஓவர்கள் பந்துவீசி ஓட்டங்களை வழங்கி விக்கெட்டைகளை கைபப்ற்றினார். லக்ஷன் சந்தகான் 04 ஓவர்கள் பந்துவீசி 46 ஓட்டங்களை வழங்கி விக்கெட்டை கைப்பற்றினார்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கோல் மார்வல்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.