LPL – காலி அணியை உருட்டி எடுத்த தம்புள்ளை

தம்புள்ளை சிக்சேர்ஸ் மற்றும் கோல் மார்வல்ஸ் அணிகளுக்கிடையில் இன்று(09.07) இரண்டாவது போட்டியாக கண்டி தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் எதிர்பாராத வெற்றி ஒன்றை தம்புள்ளை அணி பெற்றுக்கொண்டது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கோல் மார்வல்ஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

161 என்ற வெற்றியிலக்கை கோல் மார்வல்ஸ் அணி ஓரளவு இலகுவாக பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்து. ஆனால் தம்புள்ளை அணியின் அபாரமான பந்துவீச்சு நிலைமையை மாற்றியது. ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து காலி அணி தடுமாறியது.

முதல் மூன்று விக்கெட்களையும் நுவான் துஷார கைப்பற்றினார். நிரோஷன் டிக்வெல்ல 07(03), ரிம் செய்பேர்ட்00(02), பானுக்க ராஜபக்ஷ 07(09) ஓட்டங்களுடன் நுவான் துஷாரவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்து ஜனித் லியனகே 03(03) ஓட்டங்களுடன் டில்ஷான் மதுஷங்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீசிய டுஷான் ஹேமந்த மூன்று விக்கெட்களை அடுத்ததடுத்து கைப்பற்றினார். அலெக்ஸ் ஹேல்ஸ் 17(20), சஹான் ஆராச்சிகே 11(20) ,டுவைன் பிரட்ரோரியஸ் 03(08) ஓட்டங்களுடன் டுஷான் ஹேமந்தவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். டுஷான் ஹேமந்த 4 ஓவர்களில் 33 ஓட்டங்களை வழங்கினார்.

நுவான் பிரதீப்பின் பந்துவீச்சில் கவிந்து நதீஷான் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். இசுரு உதார இறுதி நேரத்தில் தனித்து நின்று போராடி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். இந்த தொடரில் இரண்டாவது அரைச்சதத்தை பெற்றுக்கொண்டார். இறுதி ஓவரில் 27 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இசுரு உதான 72(38) ஓட்டங்களுடன் சமிந்து விஜயசிங்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இறுதியாக மஹீஸ் தீக்ஷண 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 135 ஓட்டங்களை காலி அணி பெற்றுக் கொண்டது.

முதலில் துடுப்பாடிய வேளையில் தடுமாறிய தம்புள்ளை சிக்சேர்ஸ் அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்ளை இழந்து 160 ஓட்டங்களை பெற்றது. இதில் சமிந்து விஜயசிங்க 56(34) ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். தடுமாறிய தம்புள்ளை அணிக்கு இறுதி நேரத்தில் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் தம்புள்ளை அணியை மீட்டு எடுத்தார். 20 வயதான இவர் இந்த LPL தொடரில் திறமையை வெளிக்காட்டிய இளையயவராக தன்னை இனம் காட்டியுள்ளார். லஹிரு உதார 26(17) ஓட்டங்களையும், குஷல் பெரேரா 17(12) ஓட்டங்களையும், ரீஷா ஹென்றிக்ஸ் 16(13) ஓட்டங்களையும், டுஸான் ஹேமந்த 15(13) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் டுவைன் பிரட்ரோரியஸ் 4 ஓவர்களில் 29 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். கவிந்து நதீஷான் 4 ஓவர்களில் 16 ஓட்டங்களை வழங்கி 03 விக்கெட்களை கைப்பற்றினார். ஷகூர் கான் 4 ஓவர்கள் பந்துவீசி 52 ஓட்டங்களை வழங்கி 1 விக்கெட்டை கைப்பற்றினார். இசுரு உதான 3 ஓவர்களில் 16 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களை கைப்பற்றினார். இதன் மூலம் இந்த தொடரில் கூடுதலான விக்கெட்களை கைப்பற்றியுளார். 10 விக்கெட்ளை அவர் வீழ்த்தியுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் தம்புள்ளை அணி 4 புள்ளிகளோடு நான்காமிடத்துக்கு முன்னேறியுள்ளது. முதலாமிடத்தில் காணப்பட்ட காலி அணி இரண்டாமிடத்துக்கு பின் தள்ளபப்ட்டுள்ளது. இன்று கண்டி அணியோடு தோல்வியடைந்து முதலிடத்தை இழந்த யாழ் அணி, கோல் மார்வல்ஸ் அணியின் தோல்வி மூலம் முதலிடத்தை பெற்றுக்கொண்டது.

அணி விபரம்

தம்புள்ள சிக்சேர்ஸ் – நுவனிது பெர்னாண்டோ, குஷல் ஜனித் பெரேரா, மொஹமட் நபி, மார்க் சப்மன், சமிந்து விக்ரம்சிங்கே, துஷான் ஹேமந்த, டில்ஷான் மதுசங்க , ரீஷா ஹென்றிக்ஸ்,லஹிரு உதார, நுவான் பிரதீப், நுவான் துசார

காலி அணி மாற்றங்களின்றி கடந்த போட்டியில் விளையாடிய அணியோடு விளையாடுகிறது. முஸ்டபைசூர் ரஹ்மானுக்கு பதிலாக நுவான் துசார தம்புள்ளை அணியில் விளையாடுகிறார்.

கோல் மார்வல்ஸ் – பானுக்க ராஜபக்ஷ, நிரோஷன் டிக்வெல்ல, மஹீஸ் தீக்ஷண, ரிம் ஷெய்பேர்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜனித் லியனகே, டுவைன் ப்ரட்டோரியஸ், ஷஹான் ஆராச்சிகே, ஷகூர் கான், , இசுரு உதான,கவிந்து நதீஷான்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version